ஈரான் மீது தாக்குதல்; அமெரிக்காவுக்கு தங்களில் விமான தளத்தை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள ஸ்பெயின்..! - Seithipunal
Seithipunal


அணுசக்தி திட்டம் மற்றும் போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது வான்வழி  ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய இந்த கூட்டுத்தாக்குதல்களில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட்டுள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள 14 அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் போர்க்கள மாகியுள்ளன. 

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக ஸ்பெயின் நாட்டில் உள்ள ரோட்டா மற்றும் மோரோன் விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்கா கோரிக்கை விடுத்ததோடு, 15 விமானங்கள் அந்த தளங்களை நோக்கி சென்றன.

ஆனால், ஸ்பெயின் தங்களது தளங்களை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள நிலையில், குறித்த அமெரிக்க விமானங்கள் ஜெர்மனியில் தரையிறங்கியுள்ளது.

இது குறித்து பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்பரேஸ் கூறுகையில்; "அமெரிக்காவும் ஸ்பெயினும் இணைந்து செயல்பட்டாலும் கூட, எங்களுடைய இறையாண்மையின் கீழ் ஈரானை தாக்க ஸ்பெயின் தங்களுடைய விமான தளங்களை அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இங்கிலாந்தும் அனுமதி மறுத்த நிலையில், பின்னர் கூட்டு சுய-பாதுகாப்பிற்காக அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Spain refuses to allow US to use its airbase to attack Iran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->