கொச்சியில் பரபரப்பு...! மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் புகார்...! - காவலர்கள் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


கேரளாவைத் தாண்டி தமிழகத்திலும் 2022ஆம் ஆண்டு பெரும் பேசுபொருளாகி வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிதம்பரம், தற்போது கடுமையான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

கொச்சி அருகே எலம்குளம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், எர்ணாகுளம் தெற்கு காவலில் அளித்த புகாரில், இயக்குநர் தனது குடியிருப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 74 மற்றும் 75 கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயக்குநரிடம் நேரடி விசாரணை நடத்தப்படுமெனவும், தேவையெனில் கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stir Kochi harassment complaint against Manjummal Boys director Chidambaram Police investigating intensively


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->