'அதிகாரப் பகிர்வு அவசியம்… ஆனால் தொகுதி பங்கீட்டில் பேரம் பேசும் கட்சி அல்ல விசிக'...! -தொல். திருமாவளவன் உறுதி - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான முதற்கட்ட தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினர், திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், “எங்கள் கட்சியின் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் தெளிவாக தெரிவித்துள்ளோம்.

முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் திமுக தரப்பில் மீண்டும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளனர்" என்றார்.மேலும், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்கள் ஆதரவு மற்றும் வலிமைக்கேற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

திமுக கூட்டணியில் இருந்தாலும் பேரம் பேசும் அரசியலில் எங்கள் கட்சி ஈடுபடாது. நியாயமான பங்கீடு மட்டுமே எங்கள் கோரிக்கை" என வலியுறுத்தினார்.புதுச்சேரியிலும் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அங்கு தனித்தொகுதியும் பொதுத்தொகுதியும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

“இது ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து அல்ல; தொகுதி ஒதுக்கீட்டில் நியாயமான இடம் கிடைப்பதற்கான கோரிக்கையே” என்றும் விளக்கினார்.அத்துடன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்றும், தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் அரசியல் யுக்திகள் பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power sharing necessary but Dalit Panthers not party that negotiates seat sharing Thirumavalavan confirms


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->