இரவும் இளநீர் குடிக்கலாமா...? - மருத்தவர்கள் சொல்வது என்ன...?
Can we drink tender coconut water at night What do doctors say
உலகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் குடிக்கும் இயற்கை பானங்களில் முதன்மையானது இளநீர். இதன் சுவையும், சத்தும் காரணமாக இதை விரும்பாதவர்கள் மிகவும் அரிது. எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பானம், குறிப்பாக கோடை காலங்களில் இந்தியா முழுவதும் அதிகளவில் விற்பனையாகிறது.

பலருக்கும் எழும் பொதுவான கேள்வி – “இளநீரை இரவு நேரத்தில் குடிக்கலாமா?” என்பதுதான். உண்மையில், பகலில் மட்டுமல்ல, இரவிலும் இளநீர் அருந்துவது உடல் நலத்திற்கு நல்ல பலன்களை தரக்கூடியது. கோடை வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்க சிறந்த தீர்வாக இருக்கும் இளநீர், இரவு நேரங்களில் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் பருவகால தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் திறனும் இதற்கு உள்ளது.இளநீரில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததால், சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன் இளநீர் குடித்தால், அதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, குடல்செயல்பாட்டை மேம்படுத்தும். உடலில் நீரிழப்பைத் தடுக்கும் திறனும் இதற்கு உண்டு.
ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் இந்த பானம், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயம் குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இளநீர் அருந்திய பிறகு அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவது இயல்பு.
இதனால் உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் தொற்றுக்கிருமிகள் வெளியேற உதவுகிறது. குறிப்பாக சிறுநீரக மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளைத் தடுக்கவும் இது பயனுள்ளதாகும்.
எப்போது வேண்டுமானாலும் குடிக்கக்கூடிய பானமாக இருந்தாலும், உணவுக்கு முன் அல்லது பின், உடற்பயிற்சிக்கு பிறகு, குறிப்பாக தூங்குவதற்கு முன் குடித்தால் அதன் நன்மைகள் இரட்டிப்பாகும். இது செரிமானத்தை சீராக்கி, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
இரவு நேரத்தில் குடிப்பது மன அழுத்தத்தை குறைத்து, இதயத் துடிப்பை சமநிலைப்படுத்தி, அமைதியான தூக்கத்துக்கும் உதவுகிறது.பொதுவாக தினமும் ஒரு அல்லது இரண்டு டம்ளர் இளநீர் போதுமானது. ஆனால் சர்க்கரை நோய் அல்லது பிற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.
English Summary
Can we drink tender coconut water at night What do doctors say