மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்..! ஈரான் தாக்குதலுக்கு பின் லெபனான் மீதும் இஸ்ரேல் கடும் ஏவுகணை மழை...! -31 பேர் பலி
Tension Middle East their peak After Iranian attack Israel launched heavy missile attacks Lebanon 31 people killed
அணுசக்தி போட்டியை மையமாகக் கொண்டு ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் குண்டுவீச்சுகள் நடைபெற்று வருகின்றன.

டெஹ்ரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி, நிலைமை மேலும் பதற்றமடைந்தது.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக, வளைகுடா பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இஸ்ரேலை எதிர்த்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
English Summary
Tension Middle East their peak After Iranian attack Israel launched heavy missile attacks Lebanon 31 people killed