அணு போட்டி போராக மாறியது: ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்…! -இந்தியாவுக்கு உள்துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அணுசக்தி ஆதிக்கப் போட்டியைத் தொடர்ந்து ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.டெஹ்ரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடி நடவடிக்கையாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோதலின் தாக்கம் சர்வதேச அளவில் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிலும் வன்முறைச் சம்பவங்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் மாநிலங்களுக்கு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nuclear race turned into war Israel US attack Iran Home Ministry warns India


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->