தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல்; இயக்குநர் சேரன் வெற்றி; 155 வாக்குகளில் வி.சி.குகநாதன் தோல்வி..! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இச்சங்கத்தின் தலைவராக இருந்த பாக்யராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் அரங்கத்தில் காலை 08 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 21 பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு சேரன் தலைமையில் 'நம்ம கே.பாக்யராஜ்' என்ற அணியும், வி.சி.குகநாதன் தலைமையில் 'திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்' என்ற அணியும் போட்டியிட்டன. இரண்டு பேர் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு, யார் கண்ணன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அந்த வகையில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபனா உடன் வந்து வாக்களித்ததோடு, நடிகர் ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இதற்கிடையே, சந்தா காட்டவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 108 உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று 'நம்ம பாக்யராஜ் அணி' சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், இரு அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

காலை 08 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 04 மணிக்கு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதில், 'நம்ம கே.பாக்யராஜ்' அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவர்களாக சேரன் அணியை சேர்ந்த சமுத்திரக்கனி, சினேகனும் தேர்வு செய்யப்பட்டனர். சேரனை எதிர்த்து, 'திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்' அணி சார்பில் போட்டியிட்ட வி.சி.குகநாதன் 155 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Cheran wins South Indian Film Writers Association elections


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->