2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 03 விருதுகளை அள்ளிய 'அமரன்'; தனுசுக்கு 02 விருதுகள்..!
National Film Awards 2024 announced
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் திரைக்கலைஞர்ககளுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, கெளரவித்து வருகிறது. அதனபடி, 2024ஆம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று, சிறந்த சமூக அக்கறைக்கான படம் மற்றும் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது ( தனுஷ்) 'கேப்டன் மில்லர்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படத்துக்கான விருது 'ஆர்ட்டிகள் 370' என்ற இந்திப் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது, 'பிரம்மயுகம்' படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது 'ஆர்ட்டிகிள் 370' திரைப்படத்துக்காக நடிகை யாமி கெளதமுக்கு அறிவிக்கப்பட்டியுள்ளது. சிறந்த படத்தொகுப்பு (கலைவண்ணன்) மற்றும் சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த இயக்குநருக்கான (ராஜ்குமார் பெரியசாமி) விருது 'அமரன்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு தேசிய விருது, 'மெய்யழகன்' படத்திற்காகவும், சிறந்த சண்டைப் பயிற்சி (அனல் அரசு) மற்றும் சிறந்த துணை குணச்சித்திர நடிகை (சஞ்சனா நமிதாஸ்) ஆகியவற்றுக்கான இரண்டு தேசிய விருதுகள் 'மஹாராஜா' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் (தீபாலி நூர், ஷீதல் ஷர்மா) விருது 'புஷ்பா 2' திரைப்படத்துக்கு அறிவிப்பட்டுள்ளது.
English Summary
National Film Awards 2024 announced