பெருங்குடியில் பேரதிர்ச்சி! தூக்கத்தில் இருந்த தாயை உரலால் அடித்துக் கொன்ற ராகேஷ்... ! காவலர்கள் அதிரடி கைது...!
Shock Perungudi Rakesh killed his sleeping mother hammer Police arrest him hurry
சென்னை பெருங்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த நகை அடகுக் கடை உரிமையாளர் பாபுலாலின் மனைவி சென்னி தேவி, அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாக உயிரிழந்தார். மனநல சிகிச்சை பெற்று வந்த அவரது மகன் ராகேஷ் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த துரைப்பாக்கம் காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ராகேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரபல ரவுடியான 'பலி ஆடு' அஜய், மர்ம நபர்களால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.
திருநங்கையை இறக்கிவிட்டு புறப்பட முயன்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியது. தகவலறிந்த வண்ணாரப்பேட்டை காவலர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடர்பான முன்விரோதமே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் ஒரே நாளில் பெண் மற்றும் ரவுடி கொலை செய்யப்பட்ட இரு சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Shock Perungudi Rakesh killed his sleeping mother hammer Police arrest him hurry