"என் தோல் நிறத்தை மாற்ற 4 லேயர் மேக்கப் போட்டார்கள்" – நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்த சினிமா அனுபவங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி, தனது திரையுலக ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, தோல் நிறம், உடல் தோற்றம் மற்றும் உயரம் தொடர்பாக தாம் எதிர்கொண்ட அழுத்தங்களை அவர் பகிர்ந்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

2002-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'மைனே தில் துஜ்கோ தியா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சமீரா ரெட்டி, அப்போது தனது இயல்பான மாநிற தோல் காரணமாக பல்வேறு சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் முன்பாக என் முகத்தில் மூன்று அல்லது நான்கு அடுக்குகள் வெள்ளை நிற மேக்கப் போடுவார்கள். சில நேரங்களில் அது மிகவும் செயற்கையாகத் தோன்றும். என் முகத்தின் நிறத்துடன் பொருந்துமாறு உடலிலும் சிறப்பு மேக்கப் பயன்படுத்துவார்கள்" என்றார்.மேலும், தனது உடல் தோற்றம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

"என்னை குண்டாக இருப்பதாகவும், என் கண்கள் அழகாக இல்லை என்றும் கூறினர். அதனால் செயற்கையான விஷயங்களை நம்பத் தொடங்கினேன். பேடட் பிரா, ஹிப் பேட்ஸ், கண்களின் நிறத்தை மாற்றும் காண்டாக்ட் லென்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினேன். நான் நானாக இருக்க அனுமதிக்கப்படவில்லை" என்று சமீரா ரெட்டி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதேபோல், தனது உயரம் காரணமாகவும் படப்பிடிப்புகளில் சிரமங்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்."சில படங்களில் என்னுடன் நடித்த ஹீரோக்களை விட நான் உயரமாக இருந்ததால், அவர்களுடன் காட்சிகளில் நடிக்கும்போது குனிந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் உயரத்தை மறைக்க பல்வேறு வழிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது" என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீராவின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் அவர் குறிப்பிட்ட நடிகர் தெலுங்கு நடிகர் என்.டி.ஆர். ஆக இருக்கலாம் என்று ஊகித்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், சமீரா ரெட்டி தனது பேட்டியில் எந்த நடிகரின் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. எனவே, இந்த விவாதங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகும் ஊகங்களாகவே பார்க்கப்படுகின்றன.

சினிமா துறையில் அழகுக்கான கட்டாயமான தரநிலைகள், தோல் நிறம் மற்றும் உடல் தோற்றம் தொடர்பான அழுத்தங்கள் குறித்து சமீரா ரெட்டி பகிர்ந்துள்ள இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They applied four layers of makeup to change my skin tone Actress Sameera Reddy shares her cinematic experiences


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->