"எனக்கு இன்னும் அழகான ஹீரோ அஜித்தான்" – நடிகை கண்ணழகி மீனா ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை மீனா, தற்போது கேரக்டர் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மீனா, பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து சற்று விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'ரவுடி பேபி' திரைப்படத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்த தலைமுறையில் உங்களுக்கு அழகான ஹீரோ யார்?" என்ற கேள்விக்கு பதிலளித்த மீனா, "எனக்கு யாரும் நினைவுக்கு வரவில்லை. எனக்கு என்னுடைய ஆள் அஜித்தான் நினைவுக்கு வருகிறார். இப்போதும் அவர் மிகவும் அழகாக இருக்கிறார்" என்று புன்னகையுடன் கூறினார்.

மீனாவின் இந்தக் கருத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது பேட்டி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, மீனா மற்றும் அஜித் இணைந்து 'ஆனந்த பூங்காற்றே', 'வில்லன்', 'சிட்டிசன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை சந்தித்தபோது, "உங்களுக்கு அஜித்தான் ஃபேவரைட் என்று எனக்கு தெரியும். நீங்கள் என்னுடன் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை" என்று விஜய் நகைச்சுவையாக கூறிய சம்பவத்தையும் மீனா முன்னர் பகிர்ந்திருந்தார்.

குறிப்பாக, மீனா விஜய்யுடன் முழுநீள திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததில்லை. இருப்பினும், 'ஷாஜஹான்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாவின் இந்தப் பேட்டி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது இயல்பான பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith is still the most handsome hero to me Actress Meena speaks her mind


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->