30 ஆண்டுகளாக போலி மருத்துவம்...! திண்டுக்கல்லில் உரிய தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த 68 வயது நபர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே முறையான மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படும் 68 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வடமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொம்பேறிபட்டியில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அந்த மருத்துவமனையை நடத்தி வந்த அந்தோணிதாஸ் என்பவர், உரிய மருத்துவக் கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

மேலும், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் அந்தோணிதாசை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.கொம்பேறிபட்டியில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வளவு நீண்ட காலமாக உரிய தகுதியின்றி மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake medicine 30 years 68 year old man who providing treatment without proper qualifications Dindigul arrested


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->