தகவல் தந்தது வட்டாட்சியர்...கைதானது உதவியாளர்...! - மயிலாடுதுறையில் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது...! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி, வட்டாட்சியர் பெயரை பயன்படுத்தி ரூ.3.50 லட்சம் லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் கிராம உதவியாளரை காவலர்கள் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது.

கிராம உதவியாளராக பணியாற்றி வரும் இவர், வண்டல் மண் எடுப்பதற்காக வந்தவர்களிடம் வட்டாட்சியர் பெயரை குறிப்பிட்டு பணம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நம்பியவர்களிடம் இருந்து அவர் ரூ.3.50 லட்சம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன், காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரைத் தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் அடிப்படையில் கிராம உதவியாளர் முகமதுவை நேற்று கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகமது சிறையில் அடைக்கப்பட்டார்.

வட்டாட்சியர் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

information was given by the Tahsildar...the assistant was arrested...! - A village assistant was arrested for taking a bribe of Rs. 3.50 lakh in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->