ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி...! விநாயகர் ஊர்வலத்தின்போது காவலர்கள் முன்னிலையில் "குண்டு வெடிக்கும்" என மிரட்டல் விடுத்த இளைஞர் கைது...! - Seithipunal
Seithipunal


ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 16-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் வழியாக ஊர்வலம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக காவலர்கள் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர், “பாரத மாதாவுக்கு ஜெய்” என முழக்கமிடுவார்கள்; நாங்கள் அதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மற்றொரு இளைஞர் அங்கு வேகமாக வந்து, “ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்... எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என காவலர்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு திடீர் பதற்றம் நிலவியது. சம்பவத்தைத் தொடர்ந்து, இரு இளைஞர்களையும் காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Srivilliputhur youth who threatened explode bomb front police during Ganesha procession arrested


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->