சிவகாசியில் சோகம்...! இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் தொழிலாளி கை துண்டாகி பரிதாப பலி....! - Seithipunal
Seithipunal


சிவகாசியில் காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியின்போது பெண்ணின் சேலை இயந்திரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதில், கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் அப்பகுதியில் உள்ள காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் மூலம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இன்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர், பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியது.

கண் இமைக்கும் நேரத்தில் சேலை இயந்திரத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டதில், பாண்டியம்மாளும் இயந்திரத்தில் சிக்கினார்.இந்த கோர விபத்தில் அவரது கை துண்டானதுடன், அதிகளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் படுகாயமடைந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பாண்டியம்மாளின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின்போது ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Sivakasi female worker hand severed after her saree got caught machine and she died tragic death


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->