'தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம்; தமிழகத்தைச் சேர்ந்த தேர்வாளர்களும் இதற்கு காரணம்'; இயக்குனர் மோகன் ஜி விமர்சனம்..!
Director Mohan G criticizes bias in National Awards selection
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி செய்துள்ளார். சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது; தவெக ஆட்சிக்கு வந்தபின், திரைப்படங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியாவதாகவும், முன்பு மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சென்சார் கட்டாயம் என்ற முடிவை வரவேற்றுள்ள அவர், ஓடிடி துறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விளக்கம் கொடுத்தார். மத்திய அரசு ஆதரவு அளிக்கும் வேவ்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் போல தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து அவர், தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் இருப்பதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கும்போது அந்த விமர்சனத்தை தானும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற தேசிய விருதுகள் மற்றும் கோவா திரைப்பட விழா விருதுகள் வழங்கும் முறையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வாளர்களும் இதற்கு காரணமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
English Summary
Director Mohan G criticizes bias in National Awards selection