பக்தர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு! திருப்பதி ஏழுமலையான் கோவில் 10½ மணி நேரம் நடை அடைப்பு...! - சந்திர கிரகணத்தால் தரிசனம் ரத்து - Seithipunal
Seithipunal


நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுமார் 10½ மணி நேரத்திற்கு தரிசனம் நிறுத்தப்பட உள்ளது. இதனால் அந்த நாளுக்கான அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சந்திர கிரகணம் மாலை 3.20 மணிக்கு தொடங்கி 6.47 மணிக்கு நிறைவடைகிறது. பாரம்பரிய வழக்கப்படி, கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் நடை மூடப்படும்.

அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டு, பின்னர் சுத்திகரிப்பு மற்றும் புனித சடங்குகள் நடத்தப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்படும்.

இரவு 8.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.மேலும், அன்றைய தினம் நடைபெற இருந்த அஷ்டதள பாத பத்மாராதனை, மாற்றுத்திறனாளிகள்,வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித பிரம்மோற்சவம், , கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு, மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், காணிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, பக்தர்கள் யாத்திரையை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையற்ற சிரமங்களை தவிர்க்குமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Important announcement devotees Tirupati Ezhumalaiyan Temple closed 10 and half hours Darshan cancelled lunar eclipse


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->