''கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது'' வைகோ புகழாரம்..! - Seithipunal
Seithipunal


கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவெக அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று வைகோ சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: 

தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இது மக்கள் மனதை குளிர்விக்கக் கூடிய ஆரோக்கியமான நிர்வாகம். கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 02 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக வரும் யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது என்றும், அவர்களின் நிலைப்பாடு பற்றி இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று, மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியுமா? என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் தேர்தல்களில் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து நான் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அவர் அதற்கு அனுமதி தரமாட்டார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறதாகவும், முதல்வர் விஜய் எளிமையாக, இயல்பாக, வெளிப்படைத் தன்மையோடு இருக்கிறார். நல்லது நடந்தால் வரவேற்பேன் இல்லையென்றால் எதிர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko heaps praise stating that Joseph Vijay government operates free from commission and corruption


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->