'பாலியல் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்'; ஜி.கே. வாசன்..!
GK Vasan says the police must crack down on sexual crimes and breakdowns in law and order with an iron fist
''தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை புதிய செய்தியல்ல, அது பழைய செய்தியின் விரிவான தொகுப்பு மட்டுமே' என்றும், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை காவல்துறை எவ்வித கால அவகாசமும் இன்றி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கையில் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கமும், டாஸ்மாக் கலாச்சாரமுமே பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குற்றங்களுக்கு முதன்மைக் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுவதாகக் கூறியுள்ளார்.

அத்துடன், 'தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை புதிய செய்தியல்ல, அது பழைய செய்தியின் விரிவான தொகுப்பு மட்டுமே' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடன் சுமையைக் குறைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்தான் புதிய அரசின் சாமர்த்தியம் அடங்கியுள்ளது என்று தவெக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மின்கட்டண உயர்வு குறித்த செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதால், மின்கட்டண உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று, கோடைகாலத்தில் மின்தடை ஏற்படாமல் கண்காணிப்பதும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமை என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
GK Vasan says the police must crack down on sexual crimes and breakdowns in law and order with an iron fist