உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்; ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புதுக்கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

​துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன், சீல் வைக்கப்பட்ட கன்டெய்னர் லாரி மூலம் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜன் தலைமையில் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் லாரியின் சீல் உடைக்கப்பட்டது.

பெங்களூருவில் இருந்து 101 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1,030 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தற்பொழுது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electronic Voting Machines safely stored in the strong room as part of local body election preparations


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->