இமயமலைப் பகுதி உள்ளிட்டத் தொலைதூரப் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! - Seithipunal
Seithipunal


இமயமலைப் பகுதி உள்ளிட்டத் தொலைதூரப் பகுதிகளில் தற்போது காற்று மாசு அடைந்து வருகிறதாகவும், இது காற்றின் தரத்தில் அளவிடக்கூடிய தாக்கம் குறித்திடும், நீண்ட கால உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, மீத்தேன் அல்லாத ஹைட்ரொகார்பன்ஸ் என்பவை எரிபொருள் பயன்பாடு, வாகனங்கள், பிற மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் வேதி வினைபுரியும் வாயுக்களின் தொகுப்பு ஓசோன் மண்டலத்தில் இரண்டாம் நிலை ஏரோசோல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இவற்றைக் கண்காணிப்பதும், பிராந்திய காற்றின் தரத்தில், இவற்றின் விளைவுகள் குறித்தும், மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் மதிப்பிடுவது அவசியமானதாகும்.

சுற்றுலா உள்ளிட்ட உள்ளூர் மனித நடவடிக்கைகளின் தாக்கம், பிராந்திய காற்றுத் தரநிலை ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான தனித்துவ சூழலை வழங்குகிறது.

அந்த வகையில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனமான ஆர்யபட்டா அப்சர்வேஷனல் சயின்சஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இமயமலையில், அதிக உயரத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான முன்சியாரியில் ஓராண்டு காலம் (2022–2023) 'மீத்தேன் வாயு அல்லாத ஹைட்ரோகார்பன்களை' அளவிடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது ஆராய்ச்சியாளர்கள் இங்கு தெளிவான பருவகால மாற்றங்களை கண்டறிந்துள்ளனர். அதன்படி, குளிர்காலம், பருவமழைக் காலங்களில் மீத்தேன் வாயு அல்லாத ஹைட்ரோகார்பன் வாயுக்களின் அளவு குறைவாகவும், வசந்த காலம், இலையுதிர் காலங்களில் அவற்றின் செறிவு கணிசமான அளவில் அதிகமாகவும் இருந்தது கண்டறிந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking findings in a study on rising air pollution in the Himalayan regions


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->