தமிழக சட்டப்பேரவை; ''தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும்; விசிக-க்கு மாற்றுக்கருத்து இல்லை''; அமைச்சர் வன்னி அரசு..!
Minister Vanni Arasu states that the Tamil Thai Vazhthu must be sung first at the commencement of the Tamil Nadu Legislative Assembly session
இன்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த நிலையில் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10;00 மணிக்கு கூடுகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்க உள்ளது.
அதன்படி, சட்டப்பேரவை விதி எண் 176-இன் படி கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்பதில்விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தவெக அரசில் சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது குறித்து புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; சட்டமன்றத்தில் புதிய உறுப்பினர்களாகிய தங்களுக்கு அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் விவாதங்களில் எவ்வாறு கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
அதாவது, அமைச்சரவையில் பேசுவதற்காகத் தயாரித்து பின்னர் 16-ஆம் தேதி, முதலமைச்சரை நேரில் சந்தித்து 03 முக்கிய கோரிக்கைகள் மற்றும் துறை சார்ந்த கோரிக்கைகள் முன்வைத்ததாக குறிப்பிட்டார்.
அதில் முன்னாள் நீதியரசர் கே.என். பாட்ஷா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்பதற்காகத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் மனைப்பட்டா இல்லாத மக்களுக்கு அது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான 164ஏ பிரிவின் கீழ் பதவி உயர்வு குறித்தும் பேசப்பட்டதாக கூறினார்.

அத்துடன், நீண்ட நாட்களாகச் சிறையிலுள்ள 22 இஸ்லாமிய சிறைவாசிகளை சட்டத்திற்கு உட்பட்டு விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், இக்கோரிக்கைகளை முதலமைச்சர் கவனமுடன் கேட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இன்று (18-ஆம் தேதி) ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் சட்டப்பேரவை விதி எண் 176-இன் படி கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்ற விதிப்படியே அனைத்தும் நடக்கும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. தமிழ் தாய் வாழ்த்துதான் முதலில் இருக்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாட என்று வன்னி அரசு பேசினார்.
English Summary
Minister Vanni Arasu states that the Tamil Thai Vazhthu must be sung first at the commencement of the Tamil Nadu Legislative Assembly session