‘KHxRK’ புரோமோவை அரசியலுக்கு இழுத்த பாஜக...! மோடி-அமித் ஷா எடிட்டால் அரசியல் சர்ச்சை...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் இரு துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எதிர்பார்ப்பு மிகுந்த இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘KHxRK’ என பெயரிடப்பட்டுள்ளது.மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த வீடியோவில் “தீம் மியூசிக் ரெடியா இருக்கு” என அனிருத் கூற, “யாரு ஹீரோ?” என்று கமல் கேட்க, “கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ” என்று ரஜினி நகைச்சுவையாக பதிலளிக்கிறார்.

இதனால் இயக்குநர் நெல்சனும், அனிருத்தும் குழப்பத்தில் நிற்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதற்கிடையில், அந்த புரோமோவை மாற்றியமைத்து, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா முகங்களை சேர்த்து தமிழக பாஜக வெளியிட்டுள்ளது.

“பாரதத்தை வல்லரசாக்க அயராது உழைக்கும் இணையற்ற இரட்டையர்கள்..!” என்ற வாசகத்துடன் அந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP drags KH RK promo into politics Modi Amit Shah edits create political controversy


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->