ஈரானில் காமேனி கொலையின் எதிரொலி; ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் போராட்டகாரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல்.. ! - Seithipunal
Seithipunal


35 ஆண்டு காலம் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா காமேனி, கடந்த சனிக்கிழமை அன்று ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். நேற்று அவரது மனைவியும் தாக்குதலில் காயமடைந்து இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காமேனி கொல்லப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதாவது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுகின்றனர்.

நேற்றைய தினம் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு ஒன்று திரண்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டதோடு, கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

அங்கு நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy clashes between protesters and security forces in Jammu and Kashmir due to Khameneis assassination in Iran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->