வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்க முயற்சி செய்கிறார்கள்! வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த பெப்சி ஆர்கே செல்வமணி!
FEFSI RK selvamani Strike
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக எதிர்வரும் மே 14ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
சென்னை வடபழநியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அமைப்பாக கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சமீபத்தில், சில தயாரிப்பாளர்கள் மற்றும் முதலாளிகள், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்க முயற்சி செய்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். இதனிடையே, தொழிலாளர்களின் நலன்கள் மீதான இந்த அசட்டையான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஃபெப்சி அமைப்பு சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
அந்த நாளில் படப்பிடிப்பு, முன் தயாரிப்பு (pre-production), பின்னணி பணிகள் (post-production) உள்ளிட்ட எந்த தொழில்நுட்ப பணிகளும் நடைபெறாது எனவும், ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெறும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.
English Summary
FEFSI RK selvamani Strike