செங்கோட்டையன் எதிரிகிட்டவும் போகவில்லை. துரோகிகள் கிட்டவும் போகவில்லை; ஆனால் ஓ.பி.எஸ்..? சசிகலா விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


அதிமுக-வில் உட் கட்சி பூசல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமமுக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிற நிலையில், சசிகலாவின் நிலைப்பாடு குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும்  தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், தனி கட்சி தொடங்குவார் அல்லது பாஜக கூட்டணி, தவெக கூட்டணியில் இணைவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், பரம எதிரி கட்சியான திமுக-வில் இணைந்து அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என்றும், அவருக்கு அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்று சசிகலா கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்தோடு, இதற்கு முன்னதாக அதிமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் 02-ஆம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க. வில் இணைந்தது குறித்து சசிகலா கூறுகையில்' "செங்கோட்டையன் எதிரிகிட்டவும் போகவில்லை. துரோகிகள் கிட்டவும் போகவில்லை. புதிதான ஒரு இடத்துக்கு போயிருக்கிறார். அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என்பதுதான் என் கருத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala says Sengottaiyans decision to join TVK is a good one


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->