குரங்கு வீடியோவால் சியான் விக்ரமுக்கு வந்த வினை; லைக்ஸ்காக இப்படி தொக்கா மாட்டிகிட்டாரே..; வனவிலங்கு சட்டம் மீறலில் கீழ் நடவடிக்கை..?
Action taken against Chiyan Vikram for violating Wildlife Act over monkey video
தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தமிழ் நடிகர் விக்ரம். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று அவருக்கே ஆபத்தை முடிந்துள்ளது.
அந்த வீடியோவில், விக்ரம் அவரது வளர்ப்பு பிராணி என்று கூறப்படும் குரங்குடன் அவர் காட்சி அளித்திருந்தார். அந்த வீடியோவும் படும் வைரலானது. அதே வேகத்தில் அவர் மீது சர்ச்சையும் வேகமெடுத்துள்ளது.
அந்த வீடியோவில் உள்ள குரங்கு இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் காணப்படும் 'லார் கிப்பன்' வகையைச் சேர்ந்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இத்தகைய வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் வளர்ப்பது சட்டவிரோதமாகும்.

இந்த வகை குரங்கு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் இருந்து மணிப்பூர், ஈரோடு வழியாக சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்துல அதேவேளை, இது எப்படி நடிகர் விக்ரமுக்கு கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
நடிகர் விக்ரம் தனது சம்பந்தியான தொழிலதிபர் சி.கே.ரங்கநாதன் உதவியுடன், இந்த குரங்கை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்ப்புகளும், கேள்விகளும் சீயான் விக்ரமை சூழ்ந்ததால், நேற்று அந்த வீடியோவை சீயான் தனது சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனால் சட்டவிரோதமாக வனவிலங்கை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்தமை தொடர்பாக நடிகர் விக்ரம், தொழிலதிபர் சி.கே.ரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குரங்கு எவ்வாறு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது, அதன் உண்மையான இனம் இதுதானா..? குரங்கை வளர்ப்பதற்கான முறையான ஆவணங்கள் உள்ளதா..? போன்ற பல்வேறு கோணங்களில், வனத்துறையினர் விசாரணையை முடக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Action taken against Chiyan Vikram for violating Wildlife Act over monkey video