வெறும் அரசாணை போதாது... சட்டமாக வேண்டும்...! - தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கவிஞர் வைரமுத்து முழக்கம்...!
mere government decree not enough it needs made into law Poet Vairamuthu slogan Tamil thai vazhththu
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது கட்டாயம் என்ற வகையில், தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித்தீர்மானம் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஒருமித்த ஆதரவை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுக்காக நன்றியும் தெரிவித்துள்ளனர்.தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல. தமிழ் இனத்தின் நிலம், வரலாறு, பெருமை, பண்பாடு மற்றும் அடையாளம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் அடையாளமாக அது விளங்குகிறது.
தேசிய கீதத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, தமிழ்த்தாய் வாழ்த்தையும் தமிழர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே அறிந்து, மனப்பாடம் செய்து, அதன் பொருளையும் உணர வேண்டும்.எனவே பள்ளிப் பருவத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாணவர்களின் மனதில் பதியும் வகையில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், சட்டசபையில் சில உறுப்பினர்கள் வலியுறுத்தியதைப் போன்று, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.தமிழ்த்தாயை வார்த்தைகளால் மட்டும் போற்றாமல், தமிழின் பெருமையை காக்கும் செயல்களாலும் தொடர்ந்து வாழ்த்துவோம்.இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
English Summary
mere government decree not enough it needs made into law Poet Vairamuthu slogan Tamil thai vazhththu