தேவாலயம் எங்களுக்குத்தான் சொந்தம்; ஆராதனை நேரத்தில் அடிதடியில் இறங்கிய பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு..! - Seithipunal
Seithipunal


கேரளாவின் எர்ணாகுளம் பகு​தி​யில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை கூட்டத்தின் போது தேவாலயத்திற்கு சொந்தம் கொண்டாடி, இரு தரப்​பினர் கடும் மோதலில் ஈடு​பட்​ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மக்​கள் தொகை​யில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். அம்மாநிலத்​தில் பல்​வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்​படு​கின்​றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்​போது மோதல்​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. 

இந்நிலையில், கேரளா​வின் எர்ணாகுளம் மாவட்​டம், பிரமடத்​தில், செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவால​யம் உள்​ளது. ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபை​யும், மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபை​யும் இந்த தேவால​யத்தை சொந்​தம் கொண்​டாடி வரு​கின்​றன.

தற்​போது ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபை​யின் கட்​டுப்​பாட்​டில் தேவால​யம் உள்​ளது. அதன்படி, கடந்த ஞாயிற்​றுக்​கிழமை காலை குறித்த தேவாலயத்தில் ஆராதனை நடை​பெற்​றுக் கொண்​டிருந்​தது. அப்​போது மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபையைச் சேர்ந்த பாதிரி​யார், நிர்​வாகி​கள் திடீரென தேவால​யத்​துக்​குள் நுழைந்து தனி​யாக ஆராதனை நடத்த முயன்​றனர். இதை ஜேக்​கபைட் சபை நிர்​வாகி​கள் தடுத்துள்ளனர்.

இதனால், இருதரப்​புக்​கும் இடையே மிகப்​பெரிய அளவில் மோதல் ஏற்​பட்​டதில், பாதிரி​யார்​களும் சண்​டை​இட்டனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்​பட்​டமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து தகவல் அறிந்து ராமமங்​கலம் பகுதி போலீ​ஸார் தேவால​யத்​துக்கு விரைந்து சென்று இருதரப்​பினரை​யும் விலக்கியுள்ளனர்.

இதுதொடர்​பாக மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபை​யின் பாதிரி​யார் அபின் ஆபிர​காம் உட்பட அந்த சபையைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டுள்​ளது. அத்துடன், ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையை சேர்ந்த பாதிரி​யார் லால்​மோன் தம்பி உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்டுள்​ளது.

இதுகுறித்து எர்ணாகுளம் போலீ​ஸார் கூறுகையில்,  ''வீடியோ ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் தேவால​யத்​துக்​குள் தாக்​குதலில் ஈடு​பட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்டுள்​ளது. அவர்களை தீவிர​மாக தேடி வரு​கிறோம். விரை​வில் அனை​வரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A case has been registered against 22 people including priests who were involved in a clash over a church in Ernakulam


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->