வீரமணி போக்ஸோ வழக்கு; கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; திமுக எம்.பி. கனிமொழி..! - Seithipunal
Seithipunal


''ஜெம் நிறுவனர் வீரமணியின் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்'' என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என குறிப்பிட்டார். அத்துடன், 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 06-ஆம் தேதி தன்னார்வலர் ஒருவர் இது தொடர்பாக வீடியோவுடன் புகார் ஒன்றை தருகிறார். உடனடியாக மறுநாளே அதாவது அக்டோபர் 7ஆம் தேதியே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டோம். 

அவர் எங்களுக்கு வேண்டியவராக இருந்தால், அக். 06-ஆம் தேதி புகார் பெறப்பட்டு, 07ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. காலம் தாழ்த்தியிருக்கலாம். ஆனால், 07-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தியபோது, வீடியோ தெளிவாக இல்லாமல் இருந்தது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கை திரும்ப பெறுகிறோம் என்றோ, கைவிடுகிறோம் என்றோ சொல்லவில்லை. ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்திருக்கிறோம். ஆதாரம் கிடைத்தப்பிறகு வழக்கு தொடர்ந்து நடத்தி மேல் விசாரணை நடத்துவோம் என்றுதான் சொல்லினோம்.

ஆனால், தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி புகார் பெறப்படுகிறது. அந்தப் புகாரின் மீது அக்டோபர் 21-ஆம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த ஆட்சி கோமா நிலையில் இருந்ததா இல்லை காம் டீலிங் எதுவும் பேசியதா என்பது எங்களுக்கு தெரியவில்லை'' எனத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிலளித்து பேசியதாவது;

''முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பேட்டியை பார்த்தேன். அதில், வீடியோவை பார்த்ததாகவும், அது தெளிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் வந்த பிறகு நடவடிக்கை தொடர்கிறோம் என சொன்னோம் என்கிறார். இவர் எப்படி ஐந்து வருடங்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்தார் என்பதற்கான லட்சணம் இதுலே தெரிகிறது.

வீடியோ ஷேடோவாக (நிழலாக) இருக்கிறது என ரகுபதி எப்படி தெரிவித்தார். அவர் அந்த வீடியோவை பார்த்தாரா அல்லது பார்த்தவர்கள் அவரிடம் தெரிவித்தனரா? வீடியோ ஷேடோவாக இருந்தது என எப்படி சொன்னார் என்பதற்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வழக்கை முடிக்கிறோம் எனும் ரீதியில்தான் இவர்கள் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அரசாக இருந்தால், ஆதாரங்கள் இல்லை, மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றுதானே கேட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக இந்த ஆதாரம் பதிவானதால் அது தப்பித்தது. இல்லை என்றால் திமுக அந்த ஆதாரத்தை அழித்திருக்கும்'' என பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Kanimozhi stated that whoever the culprits in the Veeramani POCSO case may be they must be punished


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->