நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் இப்படியா..? தென்கொரியாவில் ரோபோ மோதியதில் தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்; கதறும் குடும்பத்தினர்..!
Tamil Nadu youth dies after being struck by a robot in South Korea
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான சுதர்சன், கடந்த மூன்று ஆண்டுகளாக தென்கொரியாவின் சியோரா நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று சுதர்சனின் மார்பு பகுதியில் மோதியதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதர்சன் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயமும் செய்துள்ளனர்.

விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், க சுதர்சன் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுதர்சனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Tamil Nadu youth dies after being struck by a robot in South Korea