டெல்லியில் அரங்கேறிய கொடூரம்; பூங்காவில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 17 சிறுமியை போலீசார் என்று மிரட்டி கூட்டு பலாத்காரம்; 03 பேருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் 17 வயது சிறுமியை போலீசார் என மிரட்டி 03 பேர் தூக்கிக் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் கடந்த 13ம் தேதி குஷக் சாலை பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 04 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாட்டை உலுக்கியது. 

முட்புதரில் வீசப்பட்டு கிடந்த அவரது உடல் விலங்குகள் கடித்த கொடூரத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் பலாத்கார அமபவம் நடத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது 17 வயது ஆண் நண்பருடன் நேற்று மாலை 07 மணி அளவில் கல்காஜி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின்னர் இருவரும் இரவு 07.30 மணி அளவில், கல்காஜி கோயில் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பகுதியில் உள்ள பூங்காவிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 03 நபர்கள், தங்களை போலீசார் என்று கூறி சிறுமியையும் அவரது நண்பரையும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த சிறுமியை பலவந்தமாக தூக்கிய காம கொடூரர்கள் மறைவான இடத்திற்கு கொண்டு சென்று, 3 பேரும் சேர்ந்து குறித்த சிறுமியை கொடூரமாக சீரழித்துள்ளனர். இது தொடர்பாக இரவு 08.45 மணிக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 17 year old girl was gang raped by three men while talking to a male friend in a park in Delhi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->