தமிழகத்தில் மீண்டும் வெங்காயம் விலை உயர்வு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கூட்டுறவு சங்க அங்காடிகள் மூலம் மீண்டும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 02 வாரங்களுக்கு முன்பு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.90-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.65 முதல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த வெங்காய விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெங்காயம் வரத்து ஓரளவு அதிகமாக இருந்ததால் விலை குறைந்திருந்தது என்றும், வெங்காயம் வரத்து உள்ள மாநிலங்களிலும், தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் வெங்காய விலை அதிகமாக இருந்த நிலையில்,  மக்களுக்கு உதவும் வகையில், இந்திய தேசிய கூட்டுறவு கூட்டமைப்பிடம் இருந்து தமிழக அரசு 1,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்தது.

ஓரிரு நாட்கள் மட்டும் இந்த விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கம் மூலம் மீண்டும் வெங்காயத்தை குறைந்த விலைக்கு அளிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Onion prices rise again in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->