ரோபோவுக்கும் மனிதனுக்கும் சண்டை; ரோபோவின் ஒரே கிக்கில் தூக்கி வீசப்பட்ட சமூக வலைதள பிரபலம்; அதிர்ச்சி காட்சி வைரல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் REK எனப்படும் Robot Entertainment Kombat அமைப்பு, MMA சண்டை நிகழ்வை நடத்தியது. இதில், சுமார் 06 அடி உயரம் கொண்ட மனித உருவ ரோபோவுக்கு எதிராக சமூக வலைதள பிரபலமான ஃபிராங்கி லபென்னா களமிறங்கினார்.

ரோபோ- மனிதன் சண்டையில் ரோபோ கொடுத்த அடியால் லபென்னா தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றதோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சண்டையில் ஃபிராங்கி லபென்னாவுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ரோபோ, EngineAI நிறுவனத்தின் T800 humanoid robot வகையை சார்ந்தது.

சண்டை தொடங்கியபோது லபென்னா ரோபோவை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அப்போது ரோபோ தனது கால்களால் வேகமாகத் தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதிலும்,  லபென்னா நோக்கி, ரோபோவின் அதிரடியான கிக் காரணமாக அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால், ரோபோ மனிதரை வீழ்த்தியதாக இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் இதுபோன்ற சண்டைகள் எந்த அளவுக்கு மனிதர்களுக்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். லபென்னாவுடன் சண்டையிட்ட ரோபோ முழுமையாக தன்னாட்சி முறையில் செயல்படவில்லை. அதனை ஒரு மனிதர் remote control மூலம் இயக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கூண்டுக்குள் ரோபோ இருந்தாலும், அதன் அசைவுகள் மற்றும் தாக்குதல்களை பின்னால் இருந்து ஒரு மனிதர் கட்டுப்படுத்தியுள்ளார்.

இதனால், இது மனிதருக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான நேரடிச் சண்டை என்று கூறுவதற்கு பதிலாக, மனிதரால் இயக்கப்படும் மனித உருவ ரோபோவுக்கும், ஒரு மனிதருக்கும் இடையிலானது என்று கூட சொல்லலாம். இந்நிலையில், மனிதர்களைப் போலவே அசைந்து, தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்ட ரோபோக்களின் வளர்ச்சி குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Frankie Lapenna was sent flying by a single blow from a robot during a fight between a robot and a human in the United State


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->