இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு; 09 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு..!
15 people convicted in the Easter Sunday attacks that shook Sri Lanka
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பரபரப்பான இறுதித் தீர்ப்பை நேற்று இரவு (செப்டம்பர் 22) கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த ஈஸ்டர் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவம் இலங்கையை உலுக்கியிருந்தது.
வழக்கின் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதியினால் அறிவிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை அரசுத் தரப்புக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர ஆஜரானார்.

அப்போது அவர், இந்தக் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அதன்படி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காக, வழக்கை நேற்று இரவு (2026 செப்டம்பர் 22 ) 09:00 மணி வரை அமர்வு ஒத்தி வைத்தது.
இந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் செயற்குழு தீர்ப்பின் படி, சஹ்ரான் ஹாஷிம் உட்பட எட்டு தற்கொலைத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

அதில், நௌஃபர் மௌலவி மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிரான குற்றச்சாட்டில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 09 பேரும் இந்த வழக்கில் இருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
15 people convicted in the Easter Sunday attacks that shook Sri Lanka