''ஈரானை மீண்டு வர முடியாதபடி நரகத்துக்கு அனுப்புவேன்''; ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் மிரட்டல் விடுத்த ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


ஐநா சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''ஈரானை மீண்டு வர முடியாதபடி நரகத்துக்கு அனுப்புவேன்.''என்று மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ட்ரம்ப் கூறியதாவது;

ஈரானின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவிடம் இரண்டு தேர்வுகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், ''ஈரானை மீண்டும் கட்டியெழுப்பி ஒரு பெரிய நாடாக மாற்ற ஒப்பந்தம் செய்வதா? அல்லது இஸ்லாமியக் குடியரசான ஈரானை உடனடியாக அழித்து, அவர்கள் மீண்டும் தலைதூக்க முடியாதபடி நரகத்த்துக்கு விரட்டுவதா? என்ற பெரிய முடிவை நான் எடுக்க வேண்டியுள்ளது" என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

ட்ரம்பின் இந்த கடுமையான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்ட அரங்கில் இருந்த ஈரான் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். அத்துடன், வரும் நவம்பர் 03-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகே பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் காத்திருப்பதாகவும், தேர்தலில் தான் போட்டியிடாவிட்டாலும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈரான் இனி மத்திய கிழக்கில் அச்சுறுத்தலாக இருக்க முடியாது எனவும், சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் எண்ணெய் வர்த்தகப் பாதையை அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பாக உறுதி செய்துள்ளதாகவும், ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக வரும் செய்திகளை மருத்துள்ளதோடு, அமெரிக்கப் படைகளிடம் போதிய வெடிமருந்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump warned at the UN General Assembly meeting that he would send Iran to a hell from which it could not return


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->