சென்னை வண்ணாரப்பேட்டையில் பகீர் சம்பவம்; ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறு; கொத்தனாரை அடித்து கொலை செய்துள்ள மேஸ்திரி..! - Seithipunal
Seithipunal


சென்னை வண்ணாரப்பேட்டை நல்​லப்ப வாத்​தி​யார் தெரு​வில் வெங்​க​டாசலம் என்​பவருக்கு சொந்​த​மான இடத்​தில் புதிய வீடு கட்​டும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இந்த பணியில் பழைய வண்​ணாரப்​பேட்​டையை சேர்ந்த 46 வயதான கோட்​டீஸ்​வரன் என்​பவர் மேஸ்​திரி​யாக பணி​யாற்றி வந்​தார். அவருடன், கொருக்​குப்​பேட்டை மீனாம்​பாள் நகரை சேர்ந்த 55 வயதான ஜெயக்​கொடி என்​பவரும் கொத்​த​னா​ராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கொத்தனார் ஜெயக்​கொடிக்கு கோட்​டீஸ்​வரன் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி வைத்​திருந்​த​தாக கூறப்​படு​கிறது. அதை கேட்​ப​தற்​காக ஜெயக்​கொடி, சம்பவத்தினமான நேற்று கட்​டிட வேலை நடை​பெறும் இடத்​துக்கு சென்​றுள்ளார். அப்​போது இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு அது கைகலப்​பாக மாறியுள்ளது.

இதன் போது ஆத்​திரமடைந்த மேஸ்திரி கோட்​டீஸ்​வரன், அங்​கிருந்த ரீப்​பர் கட்​டை​யால் ஜெயக்​கொடியை தாக்​கி​யுள்​ளார். இதில் தலை​யில் பலத்த காயம் அடைந்த ஜெயக்​கொடி மயங்கி விழுந்​துள்ளார்.

உடனடி​யாக அவருடன் வேலை பார்த்த தட்​சிணா​மூர்த்தி என்​பவர் ஜெயக்​கொடியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றுள்ளார். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர் ஜெயக்​கொடி ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்ளார்.

இந்த இறப்பு குறித்து மருத்​து​வ​மனை​யில் இருந்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலியாஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் கட்​டிட வேலை​யின்​போது மேலே இருந்து தவறி விழுந்து ஜெயக்​கொடி உயி​ரிழந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

போலீசாரின் விசா​ரணை​யில், ஜெயக்​கொடி கூலி பாக்​கியை கேட்கச் சென்​ற​போது ஏற்​பட்ட தகராறில் கோட்​டீஸ்​வரன் ரீப்​பர் கட்​டை​யால் தாக்​கியதும், இதில் ஜெயக்​கொடி மயங்கி விழுந்து உயி​ரிழந்​ததும் தெரிய​வந்​துள்ளது. இதைத்​தொடர்ந்​து கோட்​டீஸ்​வரனை போலீஸார்​ கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A mason in Washermanpet beat and killed a bricklayer over a dispute over wages of Rs 10 000


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->