காலை நேரத்தில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்...! மழலையர் பள்ளி வகுப்பறையில் பெண் நிர்வாகி விபரீத முடிவு...!
heart wrenching incident morning female administrator bizarre decision kindergarten classroom
மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரில், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து மழலையர் பள்ளி நடத்தி வந்த 50 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த முகுந்தனின் மனைவி அஜிதாகுமாரி (50). இவர் தனது வீட்டிலேயே மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் குடும்பத்தினருடன் தேனியில் வசித்து வருகிறார்.அஜிதாகுமாரி நடத்தி வந்த பள்ளியின் மேல் தளத்திலேயே அவரது வீடும் அமைந்துள்ளது. கணவர் முகுந்தன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அஜிதாகுமாரி தனது இளைய மகள் கீர்த்தியுடன் வசித்து வந்தார்.சில நாட்களுக்கு முன்பு சுவேதாவுக்கு மதுரையில் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவச் செலவுக்கு உதவவில்லை என்றும், தன்னை முறையாக கவனிக்கவில்லை என்றும் சுவேதா தனது தாயார் மீது வருத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு கீர்த்தி, தனது தாயார் அஜிதாகுமாரியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த அஜிதாகுமாரி, அதன்பிறகு வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று காலை அஜிதாகுமாரி பள்ளி வகுப்பறைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பாலை காவலர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள், அஜிதாகுமாரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து மழலையர் பள்ளி நடத்தி வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
heart wrenching incident morning female administrator bizarre decision kindergarten classroom