சென்னை பல்லாவரத்தில் பரிதாபம்; பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்துள்ள மூதாட்டி..!
Elderly woman dies in elevator accident at biryani shop in Pallavaram
சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் இன்று காலை லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 03 ஆண்டுகளாக இந்த பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மும்தாஜ் என்ற 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த லிப்ட் 03-வது தளத்திற்கு மேலே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் இரும்பு கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்துள்ளது. அதில் அந்த கடையில் பணிபுரிந்து வந்த மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பல்லாவரம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பிரியாணி கடையில் லிபிட்டிற்கு முறையான பராமரிப்பு இல்லாததால் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த கடையின் நிர்வாகிகளிடம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary
Elderly woman dies in elevator accident at biryani shop in Pallavaram