முதல்வர் விஜய் நடித்த திருப்பாச்சி ரீ ரிலீஸ்.. கில்லி சாதனையை முறியடிக்குமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பழைய வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் கலாசாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படும்போது, ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தளபதி விஜய்யின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருப்பாச்சி’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘கில்லி’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸை கொண்டாடினர். உலகளவில் ரீ-ரிலீஸ் மூலம் சுமார் ரூ.26 முதல் ரூ.30 கோடி வரை கூடுதல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் மற்றொரு ஆல்-டைம் பிளாக்பஸ்டர் படமான ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’, அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான ஆக்‌ஷன் படமாகும். தன்னுடைய தங்கை சென்னையில் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக, அவளுக்கு எதிராக இருக்கும் ரவுடிகளை எதிர்த்து விஜய் போராடுவதே படத்தின் மையக்கரு.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில், அவரது தங்கையாக மல்லிகா நடித்திருந்தார். பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா சீனிவாச ராவ், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், சாயா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய்யின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள், அண்ணன் - தங்கை சென்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைக்கதை ஆகியவை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. படத்தின் பாடல்களும் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘திருப்பாச்சி’, பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘அன்னவரம்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு மாஸ் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் ‘திருப்பாச்சி’ வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கில்லி’ ரீ-ரிலீஸ் ஏற்படுத்திய கொண்டாட்டம் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கும் நிலையில், தற்போது ‘திருப்பாச்சி’யும் திரையரங்குகளுக்கு வருவதால் விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கில்லி... இப்போது திருப்பாச்சி! பழைய விஜய்யின் மாஸ் என்டர்டெயின்மென்ட் மீண்டும் திரையரங்குகளில் தெறிக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Re release of the Vijay starrer Thirupachi Will it break the record set by Ghilli


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->