விருதுநகரில் தடை விதிக்கப்பட்ட 23 பட்டாசு ஆலைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க அனுமதி..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,130 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 600-க்கும் மேற்பட்ட ஆலைகள் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்குகின்றன. சில ஆலைகள் மாவட்ட வருவாய் அலுலவரின் உரிமம் பெற்றும் இயங்கி வருகின்றன.

அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 05 அறைகளில் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி அளிக்கப்படும். இந்த வகை பட்டாசு ஆலைகளில் பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

அதிலும், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் 15 அறைகளுக்குள் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்கப்படும். இங்கு மத்தாப்புகள், சோல்சா வெடிகள் போன்றவை மட்டுமே தயாரிக்க அனுமதி உண்டு.

அதேப்போன்று, நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் 15-க்கும் மேற்பட்ட அறைகளுடன் கூடிய பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த வகை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் மட்டுமே பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்க அனுமதி உண்டு.

அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு ஆலைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் 80 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதில், குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட 23 ஆலைகள் மீண்டும் இயங்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

23 firecracker factories banned in Virudhunagar repaired and allowed to operate again


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->