FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்​டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முன்மொழிவு..! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்​சிஆர்ஏ (FCRA) மசோ​தாவை நாடாளுமன்ற கூட்​டுக் குழுவுக்கு (JPC) அனுப்புவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று முன்மொழிந்தது.

இது தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிவார் என மக்களவையின் துணை அலுவல் பட்டியல் தெரிவிக்கபட்டது. அதன்படி, இன்று இது குறித்து மக்களவையின் அலுவல் பட்டியலில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா (எப்​சிஆர்ஏ), மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படவுள்ள இந்த அவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் தலைவரால் நியமிக்கப்படவுள்ள மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு அவைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை, அக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். இக்குழு 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் இச்சபைக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மற்றபடி, நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பான இந்த அவையின் நடைமுறை மற்றும் அலுவல் விதிகள், சபாநாயகர் செய்யும் மாறுபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் பொருந்தும். மேலும், மாநிலங்களவை அந்தக் கூட்டுக் குழுவில் இணைந்து, அக்குழுவுக்கு மாநிலங்களவையால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த அவை மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கிறது'' என்று அலுவல் பட்டியல் கூறுகிறது.

வெளி​நாடு​களில் இருந்து இந்​திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்​பப்​படும் நன்​கொடைகளை வரன்​முறைப்​படுத்த வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா (எஃப்​சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவை நடப்பு மழைக்​கால கூட்​டத் தொடரில் நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. ஆளும் பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் வடகிழக்கு மாநிலங்​களை சேர்ந்த சில கட்​சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government proposes to send FCRA Amendment Bill to Parliamentary Select Committee


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->