முதல்வர் விஜய்யின் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரும் மனுவை ஆகஸ்ட் 15-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அத்துடன், திருச்சி கிழக்கு தொகுதியிலும், முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய முதல்வர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குறித்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கஞர்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதால், 04 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அத்துடன் அன்றைய தினத்திற்குள் நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு  நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HC orders CM Vijay to file petition seeking dismissal of election cases by Aug 15


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->