தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் டெத் வழக்கு; மார்ச் 23-இல் தீர்ப்பு..!
Verdict on March 23rd in the Sathankulam father and son murder case that shook Tamil Nadu
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் கடை வைத்திருந்ததாக சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் போலீஸ் காவலில் அடித்து துன்புறுத்தப்பட்டு பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கே அவர்கள் இருவரும் உயிரிழந்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்கவுள்ளார்.
2020-ஆம் ஆண்டில் போலீஸ் விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்ட போது உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் தர் உள்ளிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டனர்.
English Summary
Verdict on March 23rd in the Sathankulam father and son murder case that shook Tamil Nadu