லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 31 பேர் பலி; அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய குடியரசிற்கு எதிராகவும், அணு ஆயுத போட்டி காரணமாகவும், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

நேற்று முன்தினம் தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US advises American citizens in Lebanon to leave immediately


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->