'விரக்தியில் அண்டை நாடுகளின் மீதே தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரானின் முகமூடி கிழிந்துள்ளது' என்கிறது அமெரிக்கா; 'நாங்களும் அணு ஆயுதங்களை அதிகரிப்போம்' என்கிறது பிரான்ஸ்..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த சூழலில், நாங்கள் விரும்பினால் மட்டுமே ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன், அமெரிக்கர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை என்றும், இந்த போரை அதிபர் டிரம்ப் முடித்து வைப்பார் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பதில் தாக்குதல் என ஈரான் விரக்தியில் அண்டை நாடுகளின் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரானின் முகமூடி கிழிந்து உண்மை முகம் தெரிய வந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் அரசு, இதுவரை ஏவுகணைகள், டிரோன், அணுசக்தி தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த வசதிகளையும் அந்நாட்டு மக்களுக்கு செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன், நாங்கள் பாதுகாவலர்கள் அல்ல, போர் வீரர்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் பேட்டி அளித்துள்ளார்.

இந்த சூழலில், பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான், பிரான்ஸும் அணுஆயுத எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தங்களிடம் 300-க்கும் குறைவான அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளதாகவும், கடந்த 1992-இல் இருந்து பிரான்ஸ் அணுஆயுதங்களை அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் தற்போதைய உலக நாடுகள் மீதான அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேக்ரான் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America says Irans mask has been torn by attacking its neighbors in desperation


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->