'இந்தியா சிறந்த அணி அல்ல; இந்த உலகக் கோப்பையை வெல்லாது'; சொல்கிறார் முகமது ஆமிர்..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா ,ஆற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது. இதில் இலங்கை அணி, அரையிறுதிக்கு தகுதி பெறாமல் சூப்பர் 08 சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

இந்தியா அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக, அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி 05-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த டி 20 உலக கோப்பை போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றும், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி, வெல்லாது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலும் கூறியதாவது:-

''முற்றிலும் கிரிக்கெட் பார்வையில் இருந்து நான் ஆராய்ந்ததில், ஒட்டுமொத்தமாக இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. நான் இன்னும் உங்களுக்கு சொல்கிறேன். ஜஸ்ட் அவர்களுடைய பீல்டிங்கை பாருங்கள். மூன்று முதல் நான்கு கேட்ச்கள் மிஸ் செய்கிறார்கள். பீல்டிங்கில் திணறுகிறார்கள். பும்ராவை தவிர மற்ற பந்து வீச்சாளர்களின் பந்து அடி விழுகிறது. ஒரு பவுலர் பலத்துடன் இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று அல்ல. அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லவும் மாட்டார்கள்.'' என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohammad Amir says Indian team will not win this World Cup


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->