ஓமனில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் ஒருவர் பலி..!
Indian killed in Iran attack on oil tanker in Oman
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது எரிபொருள் படகை மோத வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பிய படகை, எண்ணெய் கப்பல் மீது மோதவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலின்போது 16 இந்தியர்கள் உட்பட 21 பேர் கப்பலில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஓமனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படி, மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த இந்த எண்ணெய் டேங்கர் எம்.வி. எம்.கே.டி வ்யோம், ஓமானி தலைநகர் மஸ்கட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 52 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா படகு மூலம் இந்த தாக்குதல் நடத்தியதாக கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதில், இந்திய பணியாளர் ஒருவர் இறந்துள்ளார். மீதமுள்ள 21 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, மீட்கப்பட்டவர்களில் 16 இந்தியர்கள், நான்கு வங்கதேச நாட்டவர்கள் மற்றும் ஒரு உக்ரைன் நாட்டவர் அடங்குவதாக கூறப்படுகிறது.
English Summary
Indian killed in Iran attack on oil tanker in Oman