பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு, பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றுகிறது; அவர்களின் திட்டம் ஒரு போதும் பலிக்காது: விக்ரம் மிஸ்ரி..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ''இந்தியா நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுடன் சேர்த்து இந்திய ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து, டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல் இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்ததுடன், ராணுவ தளங்களையும் குறி வைத்தது என்றும்,  இதற்கு இந்தியப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்ததாகவும், இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளதால், அவர்கள் இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

அத்துடன், தனது பாகிஸ்தான் இவ்வாறான நடவடிக்கைக்கு பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய ஆயுதப்படைகளே தாக்குதல் நடத்திவிட்டு, தங்கள் மீது பழிசுமத்த முயற்சி நடப்பதாக பாகிஸ்தான் பொய்யான குற்றம் சாட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்றும், இதனை உலகம் நன்கு அறியும் எனவும்,  தவறான தகவல்களை பரப்பி உலகத்தை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது என்றும்,  பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் ஒரு போதும் பலிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை பாகிஸ்தான் தாக்கியது. அதில் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த சிலர் உயிரிழந்தனர். ஆனால், டுரோன் மூலம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவை குறிவைத்து தாக்கியதாக அந்நாடு தவறான தகவலை பரப்புகிறது என்று தெரிவித்துள்ளார். இதுவும் அப்பட்டமான பொய் என்றும், இன்று பூஞ்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கடுமையான தாக்குதலில், கிறிஸ்தவ பள்ளியில் இருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இந்த பள்ளியில் குழந்தைகள், ஆசிரியர்கள் அடைக்கலம் புகுந்தனர். நல்லவேலை இந்த பள்ளி மூடப்பட்டது. இல்லையென்றால் இழப்பு அதிகமாக இருந்து இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மத மோதலை தூண்டுவதற்காக பாகிஸ்தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மதரீதியில் தகவலை அந்நாடு சேர்க்கிறது. தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்த்தார்பூர் வழித்தடம் அடுத்து அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு இந்தியா அளித்த பதிலடி குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அமைச்சர் கூறியமைக்கு ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார். 

மேலும் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க முயற்சித்தால், அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் என்றும், பிரிட்டன், நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச நிதியத்தை இந்தியா அணுகும் என்றும்  விக்ரம் மிஸ்ரி மேலும், கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan is spreading false information and deceiving the world by playing double roles their plan will never work Vikram Misri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->