போர் பதற்றம்: கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
Thug Life Audio Launch KamalHaasan
கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் தற்போதைய சூழ்நிலை மற்றும் உயர் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு, மே 16ஆம் தேதி நடைபெற இருந்த ‘Thug Life’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிறொரு தேதிக்கு மாற்றுவதாக முடிவெடுத்துள்ளோம்.
எங்கள் வீர இராணுவத்தினர், தங்கள் உயிரை பணையம் வைத்து எல்லையில் காவலாக நிற்கும் இந்த நேரத்தில், இது கொண்டாட்டத்திற்கு ஏற்ற காலம் அல்ல, அமைதியான ஒற்றுமைக்கு ஏற்ற காலம் என நம்புகிறேன். இசைவெளியீட்டிற்கான புதிய தேதி, சீரான சூழ்நிலை உருவான பிறகு அறிவிக்கப்படும்.
இந்த நேரத்தில், நாட்டை பாதுகாக்க விழித்திருக்கும் வீர இராணுவத்தினருடன் நமது எண்ணங்களும் இருக்கின்றன. நாம் குடிமக்களாக உள்ளபடியால், தாங்கும் மனப்பாங்குடன் ஒற்றுமையோடு நின்று செயல்படுவது நமது கடமையாகும். கொண்டாட்டம் இல்லை, சிந்தனை இருக்கட்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thug Life Audio Launch KamalHaasan